நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
எழில் இயக்கும் புதிய படம் யுத்த சத்தம். இதுவரை காமெடி படங்களை இயக்கி வந்தவர். இந்த முறை கொஞ்சம் சீரியசான படத்தை இயக்குகிறார். பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இதில் கவுதம் கார்த்திக் ஜோடியாக சாய் பிரியா நடிக்கிறார். இவர் ஏற்கெனவே பி.வாசு இயக்கிய சிவலிங்கா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகி ஆகியிருக்கிறார்.
இது குறித்து சாய் பிரியா கூறியிருப்பதாவது: எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை) உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு. நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன்.
இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன் . முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தை கண்டு, என்னை புரிந்துகொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர். நான் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு மாடலிங் செய்து என்னை படிப்படியாக தயார் செய்து கொண்டேன்.
யுத்த சத்தம் படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். என்னால் முடிந்தளவு மிக சிறப்பாக ஆடிஷனில் நடித்து காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது. இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்றார்.