தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியில் மீண்டும் சினிமா தியேட்டர்களைத் திறந்தார்கள். இரண்டு வாரங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. வேற்று மொழிப் படங்களுக்கு மிகக் குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தனர்.
இந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் மீண்டும் பழையபடி சூடு பிடிக்க வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'லாபம்' படம் தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்கு மறுநாள் வினாயகர் சதுர்த்தி அன்று அரவிந்த்சாமி, கங்கனா ரணவத் மற்றும் பலர் நடித்துள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' வெளியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களும் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தியேட்டர்களுக்கு வரும் மக்களைக் குறைக்கும் விதமாக செப்டம்பர் 10ம் தேதி ஓடிடி தளத்தில் சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படமும், அன்றைய தினம் மாலை டிவியில் நேரடி வெளியீடாக விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படமும் வெளியாகிறது.
எப்படியோ தியேட்டர்களில் இரண்டு, ஓடிடி, டிவியில் இரண்டு படங்கள் என இந்த வாரம் புதுப் படங்களின் ரிலீஸ் வாரமாக அமையப் போகிறது.