லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
படப்பிடிப்பு முடிந்து விடைபெறும் முக்கிய நடிகர் நடிகைகளை மரியாதை செய்து அனுப்பி வைக்கும் புதிய கலாச்சாரத்தை இயக்குனர் ஹரி தொடங்கி வைத்துள்ளார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் வில்லனாக கேஜிஎப் படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. கருடா ராம் நடிக்க வேண்டிய காட்சிகள் நேற்றுடன் முடிந்தது.
அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன், அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள். இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் மற்றும் இணை தயாரிப்பாளர் அருண்குமார் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதுகுறித்து கருடா ராம் கூறியதாவது: கேஜிஎப் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் . என்றார்.