‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. கரகாட்டக்காரன் படத்தின் மூலமாக நடிகை ஆனார். முதல் படமே வெள்ளி விழா படமானதால் கனகாவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டியது. ரஜினிகாந்துக்கு ஜோடியாக கூட நடித்தார். குடும்பத்தில் பல பிரச்சினைகள், தேவிகா மரணம் அடைந்ததால் கனகா நிலை குலைந்தார்.
2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. இது தொடர்பாக கனகா தொடர்ந்து புகார் செய்து கொண்டிருந்தார். பல ஆண்டுகளாகவே கனகா தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். பல பிரச்னைகளினாலும், மன அழுத்தத்தினாலும் கனகா பாதிக்கப்பட்டார். சில ஆண்டுகளாக மவுனமாக இருந்த கனகாவுக்கு தற்போது நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது: எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆகிவிட்டதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நான் நடிக்க வந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் நான் மிகவும் பழையது.
பத்து வருடங்களுக்குள் இருந்தால் மட்டும் தான் புதியது என்று சொல்வார்கள். நிறைய விஷயங்களை நானே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த வயதில் உனக்கு நடிக்க தேவையா? என்று சிலரும் கேட்பார்கள். அப்படி என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் எப்படி பேசவேண்டும், காஸ்ட்யூம், அழகு, எப்படி பழக வேண்டும் என பல விஷயங்களை இன்றைக்கு இருப்பது போல் நான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வயசுல, இந்த மாதிரி நேரத்துல என்னை யாரும் நடிக்க கூப்பிடுவாங்களான்னு தெரியல என்றாலும் சின்ன குழந்தை மாதிரி எனக்கு நிறைய கத்துக்கணும், இன்னும் ஏதாவது செய்யணும்னு ஆசை இருக்கு.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.