ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. வருகிற செப்டம்பர் 10-ந்தேதி இப்படம் வெளி யாகிறது.
அதனால் தற்போது மூன்று மொழிகளிலும் தலைவி படத்தை பிரமோசன் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளார் கங்கனா ரணாவத். நேற்று முன்தினம் இப்படத்தின் பிரமோசனுக்காக சென்னை வந்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இங்கு நடந்த பிரஸ்மீட்டில் பங்கேற்றார்.
அதையடுத்து நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா, எனக்கு இந்த ரோலை கொடுத்ததற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பியதற்கு அவருக்கு எனது நன்றி. ஒரு பெண்ணை மையப்படுத்திய படத்தில் நடித்த அரவிந்த்சாமி பெருந்தன்மையானவர் என்று கூறியுள்ள கங்கனா, நான் பணியாற்றியதில் மிகவும் திறமையான இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றும் தெரிவித்துள்ளார்.