சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம்சரண் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் படங்களை இயக்கப் போவதாக முடிவெடுத்த ஷங்கருக்கு பல வழிகளில் இருந்தும் சிக்கல்கள் எற்பட்டது. இந்தியன்-2 படத்தை இயக்கி முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அதையடுத்து ரன்வீர்சிங் நடிக்கும் படம் அந்நியன் ஹிந்தி ரீமேக் என்றதால், அந்த படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்சும் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.
அதன்பிறகு ஒருவழியாக அந்த இரண்டு சிக்கல்களையும் கடந்து ராம்சரண் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார் ஷங்கர். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கப்போகும் அந்த கதை தனக்கு சொந்தமானது என்று கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் செல்வமுத்து என்பவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தற்போது எழுத்தாளர் சங்கம் டைரக்டர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர் செல்வமுத்து ஆகிய இருவரின் ஸ்கிரிப்டுகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிரச்சினையின் முடிவு என்னவாக இருக்கப்போகிறதோ? வெயிட் பண்ணி பார்ப்போம்.