காதலில் சொதப்புவது எப்படி, தமிழ்ப்படம்-2, வீரா என பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்.சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் அவரை இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யாமேனன். அதோடு லாக்டவுன் நேரத்தில் சேர்ந்த கலோரிகளுக்கு பை பை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட 19 மணி நேரத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது.