இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
பல இயக்குனர்கள் ஒருகட்டத்தில் நடிகராக மாறுவதை போலவே இயக்குனர் செல்வராகவனும் தனது புதிய இன்னிங்ஸை தற்போது ஒரு நடிகராக துவங்கியுள்ளார்.. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செல்வராகவன்.
இதில் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்தப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார் செல்வராகவன்.. இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “என்ன ஒரு நம்பமுடியாத பயணம்.. நன்றி அருண் மாதேஸ்வரன்” என சிலாகித்து கூறியுள்ளார்.