சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னரும் சமந்தா தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த வெப் சீரிஸான 'த பேமிலி மேன் 2' மூலம் இந்திய அளவிலும் புகழ் பெற்றார் சமந்தா. அந்த சீரிஸில் கொஞ்சம் கவர்ச்சிகரமாக நடித்தார் என்றும் பரபரப்பு எழுந்தது.
இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் 'சமந்தா அக்கினேனி' என்றிருந்த அவரது பெயரை 'எஸ்' என்ற ஒரே எழுத்தில் மாற்றிக் கொண்டார். அப்போது அவர் நடித்து வரும் 'சாகுந்தலம்' படத்திற்கான பிரமோஷனாக மாற்றியிருக்கிறார் என்று சொன்னார்கள்.
ஆனால், கடந்த சில நாட்களாக டோலிவுட் வட்டாரங்களில் சமந்தா, நாக சைதன்யா பற்றிய பேச்சுக்கள்தான் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து சிறிது ஓய்வெடுக்கப் போவதாக சமந்தா அறிவித்திருந்தார்.
மேலும், ஒரு தெலுங்கு சினிமா இணையதளத்தில் 'கிசுகிசு'வாக பெரிய இடத்து ஜோடி ஒன்று விரைவில் அதிகாரப்பூர்வமாக பிரிய இருக்கிறது. பல கோடி ரூபாய் சொத்துக்களை மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் வழங்க இருக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதையும், சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தையும் சேர்த்து வைத்தும் கிசுகிசுக்கிறார்கள்.
இருப்பினும் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது இந்த பிரிவு கிசுகிசுக்கள் பற்றி சமந்தாவிடம் கேட்கப்பட்ட போது, “ஒரு சர்ச்சை அல்லது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நான் எப்போது பேச விரும்புகிறேனோ அப்போது தான் பேசுவேன். மக்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்கும் போது பேச மாட்டேன். அப்படியான விஷயங்களுக்கு நான் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை. எந்த மோதலையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களது சொந்த கருத்துக்களைப் பற்றி எந்த அளவிற்கு உரிமை உள்ளதோ அது போல எனது கருத்துக்களுக்கும் உரிமை உள்ளது,” என்று சொல்லியிருக்கிறார்.
நாளை சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனாவின் பிறந்தநாள் வருகிறது. அதற்கு சமந்தா ஏதாவது வாழ்த்து தெரிவிக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்து ரசிகர்களின் யூகங்களுக்கு ஒரு பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.