பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அஜய் வாசுதேவ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாள படம் ஸ்கைலாக். மம்முட்டி நடித்த இந்த படத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்கிரனும் மீனாவும் இணைந்து நடித்திருந்தார்கள். ராசாவின் மனசிலே படத்திற்கு பிறகு இருவரும் இதில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ராஜ்கிரண் பெற்றிருந்தார். படத்திற்கு குபேரன் என்று டைட்டில் வைத்து டப்பிங் பணிகளையும் முடித்து அதனை தியேட்டர்களில் வெளியிட பெரிய அளவில் திட்டம் வைத்திருந்தார். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக அவர் நினைத்தபடி செயல்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக படத்தை இப்போது தொலைகாட்சி வெளியீட்டுக்கு கொடுத்து விட்டார். நாளை (29ம் தேதி) மதியம் 1 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது.