பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடைய செய்துள்ளது. வடிவேலு மற்றும் எஸ் பிக்சர்ஸ் நிர்வாகத்தினருடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல வருடங்களாக நீடித்து வந்தப் பிரச்சனைக்கு முற்றும் போடப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் புதிய படமொன்றில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் படம் அனேகமாக சுராஜ் வடிவேலுவை வைத்து இயக்கும் படமாக இருக்கலாம்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது வடிவேலின் மூன்றாவது இன்னிங்ஸ். செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மும்முரமாக பணியாற்றி வருகிறார் சுராஜ்.