நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

‛கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட்' போன்ற படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. அதன்பிறகு தெலுங்கில் துல்கர் சல்மானுடன் நடித்த ‛லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றி காரணமாக டோலிவுட்டில் பிசியாகி விட்டார். இப்படி தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மீனாட்சி சவுத்ரி குறித்து தொடர்ந்து காதல் கிசுகிசுக்களும் மீடியாக்களில் பரவிக்கொண்டு வருகிறது.
தற்போது நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்துடன் காதல் கிசுகிசுவில் அவர் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து மீனாட்சி சவுத்ரியிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‛‛எனக்கும் சுஷாந்துக்கும் இடையே இருப்பது நட்பு மட்டும்தான். காதலிப்பதாக வெளியாகி இருப்பது வெறும் வதந்தியாகும். நான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்தே இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் என்னை இணைத்து கிசுகிசுக்களை பரப்பி கொண்டு வருகிறார்கள். தங்களுக்கு பரபரப்பான அப்டேட் வேண்டும் என்பதற்காக என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள். இந்த மீடியாக்களுக்கு இதை விட்டால் வேறு வேலையே இல்லை'' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.