பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா |
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானவர் ஷெரின். அதன்பிறகு விசில், ஸ்டூடண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று வந்திருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவா என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தனக்கு கொரோனா இல்லை என இப்போது தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி ஷெரின் கூறுகையில், ‛‛மருத்துவ பரிசோதனையில் தவறான தகவல் வந்து விட்டது என்று எனது டாக்டர்கள் தெரிவித்தார்கள். 16ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. 17ம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. இதனால் கடந்த வாரம் முழுக்க நான் குழப்பத்தில் இருந்தேன். கடைசியாக மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தேன். அதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் நான் நிம்மதி அடைந்துள்ளேன். ஆனாலும் நான் தொடர்ந்து என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.