வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கோல்டன் ஈகிள் ஸ்டூடியோ சார்பில் கோவை பாலசுப்ரமணியம் தயாரித்துள்ள படம் 'தில் ராஜா'. ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார்.
படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் படத்தின் நாயகிகள் ஷெரின், சம்யுக்தா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விழாவில் பேசிய இயக்குனர் ஏ.வெங்கடேஷ் “இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா.
எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும்” என்றார்.