பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' |
தமிழ் சினிமா பாடல்களில் எந்தப் பாடலுக்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது என்பதை யு-டியுப்பில் வெளியாகும் அந்தப் பாடல்களின் வீடியோக்களும் தீர்மானிக்கின்றன. இந்த மாதம் வெளியான 'தி கோட்' படத்தில் யுவன் இசையில் வெளிவந்த பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.
இருந்தாலும் அப்படத்தின் 3 பாடல்கள் தற்போது யு-டியூப் டிரெண்டிங்கில் டாப் 5ல் இடம் பெற்றுள்ளன. ஒரு வாரம் முன் வெளியான 'விசில் போடு' முழு பாடல் வீடியோ 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்திலும், நேற்று வெளியான 'மட்ட' முழு வீடியோ பாடல் 3 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாமிடத்திலும், 'சின்னச் சின்ன கண்கள்' முழு வீடியோ 5 மில்லியன் பார்வைகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' லிரிக் பாடல் 31 மில்லியன் பார்வைகளுடன் டிரெண்டிங்கில் நான்காமிடத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஹன்டர் வன்டார்' பாடல் 2 மில்லியன் பார்வைகளுடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன.
'வேட்டையன் Vs தி கோட்' போட்டியை விடவும், அதை 'அனிருத் Vs யுவன்' போட்டியாகத்தான் பலர் சித்தரித்து வருகிறார்கள்.