பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம். 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் பிறந்த ஊரில் அவருக்கு அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் மணிமண்டபம் கட்டி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று எஸ்.பி.பி.சரண் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பொதுமக்களின் மாறா அன்பை பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சு வரையில் நீண்டகாலம் வாழ்ந்த சென்னை-34, நுங்கம்பாக்கம் காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் அல்லது வீதி' என பெயர் மாற்றம் செய்ய உரிய ஆவன செய்ய வேண்டும்.
இதை அவருடைய ரசிகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சார்பிலும், என் சார்பிலும், குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.