ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தியாராஜ பாகதவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இன்னொரு பாகவதர் இருந்தார். அவர் எஸ்.வி.சுப்பையா பாகவதர். நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்றவர். ஒரு பட்டு வேஷ்டி, ஒரு பட்டு துண்டு இவைகளை மட்டும் அணிந்து கொண்டு தலையில் ஒரு மயிலிறகையும், கையில் ஒரு புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு மொத்த நாடகத்திலும் கிருஷ்ணராக நடித்து விடுவார். சில சினிமாக்களில் அவருக்கு வேறு சில வேடங்கள் வந்தபோதும் நடித்தால் கிருஷ்ணராகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக கூறி மறுத்து விட்டார்.
இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிற சாமிக்கண்ணு வின்சென்ட் தயாரித்த 'சுபத்ரா பரிணயம்' என்ற படத்தில் அவர் அர்ஜுனனாக நடித்தார். சாமிக்கண்ணு வின்சென்ட்டும், இயக்குனர் பர்புல்லா கோசும் சுப்பையா பாகவதரை சமாதானம் செய்து நடிக்க வைத்தனர். சுபத்ராவாக டி.எஸ்.வேலம்மாளும், காரைக்குடி கணேச அய்யர் கிருஷ்ணராகவும் நடித்தனர்.
இந்த படத்திற்கு பிறகு 'கம்பர் அல்லது கல்வியின் வெற்றி' என்ற படத்தில் கம்பராக நடித்தார். அதன்பிறகு வேறு படங்களில் நடிக்காமல் மீண்டும் நாடகத்திற்கே திரும்பினார். தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரைதான் சின்னப்பா பாகவதரின் பூர்வீகம்.
கிருஷ்ணர் தனது தங்கை சுபத்ராவை அர்ஜுனனுக்கு மணமுடிக்க நினைக்கிறார். முனிவர் வேடம் பூண்டு தங்கையிடம் 'உனக்கேற்ற மணாளன் அர்ஜூனன்' என்று கூறுகிறார். அன்று முதல் சுபத்ரா அர்ஜூனனை காதலிக்கிறாள். ஆனால் சுபத்ராவை மணக்க வேண்டும் என்று துரியோதணன் விரும்புகிறான். அவருக்கு ஆதரவாக பலராமன் இருக்கிறார். இந்த சிக்கல்களை தீர்த்து கிருஷ்ணனர் எப்படி, அர்ஜூனன், சுபத்ரா திருமணத்தை நடத்துகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் 1935ம் ஆண்டு வெளியானது. இதே கதை 1941ம் ஆண்டு 'சுபத்ரா அர்ஜூனா' என்ற பெயரில் தயாரானது. இதில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.