வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
'நாட்டிய பேரொளி' பத்மினி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அன்றைக்கு இருந்த முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் 'சித்தி'. பத்மினி கேரியரில் இந்த படம் முக்கியனதாகவும் அமைந்தது. தமிழ் எழுத்தாளரான வை.மு.கோதைநாயகி எழுதிய 'தயாநிதி' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவானது. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கினார்.
பத்மினியுடன் எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ், வி.கே.ராமசாமி, வி.ஆர்.ராஜகோபால், விஜயநிர்மலா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
கதையின் நாயகியான பத்மினிக்கு 3 சகோதரிகள், ஒரு தம்பி. குடும்ப சுமை பத்மினி தலையில். தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும். சகோதரிகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். தம்பிக்கு டாக்டர் சீட் கிடைத்தும் அதற்கு பணம் கட்ட முடியாத நிலை. இந்த நிலையில் குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்கு அவர் பெரும் கோடீஸ்வரரான எம்.ஆர்.ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.
கோபம், காமம், திமிர் நிறைந்த எம்.ஆர்.ராதாவை அவர் எப்படி சமாளித்தார். தன் குடும்பத்தை எப்படி கரை சேர்த்தார் என்பதுதான் படத்தின் கதை. பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் 1966ம் ஆண்டு வெளியானது. பின்னர் 'ஆருத்' என்ற பெயரில் இந்தியிலும், 'பின்னி' என்ற பெயரில் தெலுங்கிலும், 'சிக்கம்மா' என்ற பெயரில் கன்னடத்திலும், 'அச்சண்டே பார்யா' என்ற பெயரில் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. இன்று பத்மினியின் 18வது நினைவு நாள்.