பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் இயக்குகிறார். இதில் பரத், வாணி போஜன் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார், ராஜ்குமார், காவ்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் தென்காசியில் தொடங்கி உள்ளது. முழு படப்பிடிப்பும் தென்காசியை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது எனது 12வது தயாரிப்பு. இது ஸ்லாஷர்-த்ரில்லர் வகையில் முழுக்க முழுக்க தென்காசியில் எடுக்கப்படவுள்ளது.
இயக்குநர் எம்.சக்திவேல் எனக்கு ஸ்கிரிப்ட்டை விவரித்தபோது, படத்தின் பல இடங்கள் ஆச்சர்ய திருப்பங்கள் தருவதாக இருந்தது. இக்கதையை கேட்ட பிறகு பரத் மற்றும் வாணி போஜன் இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்துவார்கள் என்று தோன்றியது. திரைக்கதை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக இருவரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டனர்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களும் அவரது கதாப்பாத்திரம் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது என்பதை உணர்ந்து உடனடியாக ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியிடவுள்ளோம். என்றார்.