இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
தனுஷின் முதல் ஹீரோயின் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். திடீரென வாய்ப்புகள் குறையவே சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பினார். கடைசியாக 'நண்பேன்டா' படத்தில் நடித்தார். அதன்பிறகு பிக் பாஸ், மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தற்போது அவர் நடித்துள்ள 'தில் ராஜா' படம் விரைவில் வெளியாகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஷெரின் திரையில் தோன்ற இருக்கிறார். இந்த படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடித்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். படத்திற்கு முதலில் 'ரஜினி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே 'தில் ராஜா' என்று மாற்றப்பட்டுள்ளது.
ஷெரின் கூறும்போது, “நண்பேண்டா படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எதற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்று காத்திருந்தபோது வந்த படம் இது. இந்த படம் எனக்கு அடுத்த ரவுண்டை உருவாக்கித் தருமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது” என்றார்.