லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல சின்னத்திரை நடிகை ஷெரின் ஜானு, ‛திருமணம், பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகமானார். தவிர அன்பே வா தொடரிலும் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகையாக இருந்தாலும் ஷெரின் ஜானுவுக்கு ஏனோ சொல்லிக் கொள்ளும் வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், அவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவி தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் புதுமுகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆஹா கல்யாணம் என்கிற தொடரில் தான் ஷெரின் ஜானு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலானது தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஷெரின் ஜானுவின் ரசிகர்கள் அவரது கம்பேக்கை கொண்டாடி வருகின்றனர்.