ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீயுடன் இணைந்து பாடிய 'மாரி 2' படப் பாடல் 'ரவுடி பேபி'. இப்பாடலுக்கு தனுஷ், சாய் பல்லவியின் நடனம் மிகப் பெரிய பிளஸ் பாயின்டாக அமைந்து இப்போதும் யு டியுபில் லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இப்பாடலுக்கு பிரபல பாலிவுட் இளம் நாயகன் கார்த்திக் ஆர்யன், இருவருடன் சேர்ந்து நடனமாடி அந்த வீடியோவை டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். “நான் உங்கள் டான்சிங் பேபி, ரவுடி பேபி” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரவுடி பேபி பாடல் வெளிவந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகப் போகிறது. இன்னமும் இப்பாடல் டிரெண்டிங்கில் தான் இருந்து கொண்டிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்புதான் இப்பாடல் யு டியூபில் 1200 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அதற்குள் 11 மில்லியன் பார்வைகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.
ரவுடி பேபி பாடலின் சாதனையை மிஞ்சும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்களில் தமிழில் மட்டுமல்ல, தென்னிந்திய, ஹிந்தித் திரையுலகில் கூட ஒரு பாடலும் வரவில்லை என்பது ஆச்சரியம்தான்.




