'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா ஆகிய கதாநாயகிகளுடன் ரஜினியின் தங்கையாக முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்தப்படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது லக்னோவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தான் கலந்துகொண்டு நடித்து வருவதை உறுதி செய்துள்ள பாலா, “சூப்பர்ஸ்டார் ரஜினி போன்ற ஜாம்பவானுடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணாத்த படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்.
ஏற்கனவே சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தார் பாலா. இப்போது அண்ணன் தங்கை சென்டிமென்ட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த அண்ணாத்த படத்தில் அனேகமாக இவர் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.