தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் மும்பையில் தன் குடும்பத்துடன் இந்த சந்தோஷ தருணத்தை பகிர்ந்துகொண்டாடிய அவர், தான் மும்பையில் தத்தெடுத்த பெண்களுடன் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். அதோடு கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை முழுவதுமாக இவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்கள் அனைவரையும் முழுமையாக குணமடைய செய்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போது உள்ளார்.
இந்நிலையில் தன் பிறந்த நாளை ஒட்டி, பொதுமக்களிடம் சில வேண்டுகோளை வைத்துள்ளார். அதாவது, ‛மக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். தங்களது கைகளை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உயிரை பறிக்க கூடிய கொரோனா நோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை, அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்' என மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.