மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் அந்த தலைப்பை நீக்கிவிட்டு வெந்து தணிந்தது காடு என்று தலைப்பு வைத்து சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இது எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறது.
இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ வரை எடை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகளின் விபரம் விரைவில் வெளியிடப்படுகிறது. இதன் படப்படிப்பும் திருச்செந்தூரில் தொடங்கி விட்டது. இந்த நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி உள்ளது. இது இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் கவிதா பாரதி கூறியிருப்பதாவது: இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். மதிசுதா என்பவர் ஈழத்து திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன். உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
எனினும் ஈழத்திரையுலகம் வணிக ரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான் இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த படத்தின் பெயர், வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது.
இவ்வாறு கவிதா பாரதி கூறியிருக்கிறார்.