அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளிவந்த ஆந்தாலஜி படமான 'நவரசா' படத்தில் கார்த்திக் நரேன் இயக்கிய 'புராஜக்ட் அக்னி' என்ற ஒரு படமும் இடம் பெற்றது. அதில் அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா, சாய் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
அதில் அதிகமான ஆங்கில வசனங்கள் இருந்ததும், அதைப் புரிந்து கொள்ள போடப்பட்ட தமிழ் சப்-டைட்டிலில் பல எழுத்துப் பிழைகள் இருந்ததும் பெரிய குறையாக இருந்தது. இருந்தாலும், அரை மணி நேரத்தில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை நல்ல டிவிஸ்ட்டுடன் கார்த்திக் நரேன் கொடுத்திருந்தார் என்பது பலரது விமர்சனமாக இருந்தது.
அறிவியல், ஜோதிடம், கம்ப்யூட்டர், பழைய வரலாறு, ஏலியன்கள், நிஜ உணர்வு, உள் உணர்வு என பல வித விஷயங்களை சாதாரண ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு குழப்பத்துடன் அரை மணி நேரக் கதையில் வைத்திருந்தார்.
சில குறும்புக்கார ரசிகர்கள் கார்த்திக் நரேன் தான் தமிழ் சினிமாவின் அடுத்த 'கிறிஸ்டோபர் நோலன்' என்று வேறு கமெண்ட் அடித்துள்ளார்கள். அதனால், இந்த 'புராஜக்ட் அக்னி' யை ஒரு முழு நீள சினிமாவாக எடுக்க உள்ளார் கார்த்திக் நரேன் என்பது அவர் பதிவிட்டுள்ள டுவீட் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
“புராஜக்ட் அக்னிக்குக் கிடைத்த பெரும் வரவேற்புக்கு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நவரசாவில் உள்ள லோ பட்ஜெட் 'புராஜக்ட் அக்னி'யை அவர் ஹைபட்ஜெட் திரைப்படமாக உருவாக்கப் போகிறார் போலிருக்கிறது. அதிக ஆங்கில வசனம், தப்பும் தவறுமான தமிழ் சப்டைட்டில்கள் ஆகியவை அந்தப் படத்திலாவது இல்லாமல் இருக்கட்டும் கார்த்திக் நரேன்.