ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என நடித்து வருபவர் ராணா டகுபட்டி. 'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர். அதற்கு முன்பாகவே சில காதல் கிசுகிசுக்களால் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். அவருக்கும் அவரது தங்கையின் தோழியான மிஹிகாவுக்கும் கடந்த வருடம் இதே நாளில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ள அவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று தங்களது முதலாவது திருமண நாளை இருவரும் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தங்களது திருமண நாளை முன்னிட்டு கணவர் ராணாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, மிஹிகா, “என்னுடைய அன்புக்குரியவருக்கு இனிய ஆண்டு விழா. இது மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு. இந்த உலகம் இருக்கும் வரையிலும், அதற்கு மேலும் உன்னை நேசிக்கிறேன். நீங்கள் நீங்களாகவும், மிகவும் அற்பதமான மனிதராகவும் இருப்பதற்கு நன்றி. இன்னும் நிறைய வாழ்நாள் இருக்கிறது. நாம் இருவரும் அருகில் இல்லாத வரையில், இது ஒரு கவுண்ட் டவுன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராணா மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சினிமாவைப் பொறுத்தவரையில் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் மட்டும் ராணா நடித்து வருகிறார்.