ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிவுகளை எனக்கும் டேக் செய்யுங்கள். அப்போதுதான் நான் அதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.
தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.




