அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் |
தற்போது பூஜா ஹெக்டேவின் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை, பீஸ்ட் என பல படங்கள் உள்ளன. இந்தநிலையில் அவரை அடுத்தபடியாக மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். என்றாலும், தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தாமதமாகி வருவதால் அவரால் புதிய படங்களுக்கு சரியானபடி கால்சீட் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.
அதனால், தற்போது அவர் கைவசமுள்ள ஆச்சார்யா, ராதே ஷ்யாம், இளங்கலை ஆகிய படங்களை ஒவ்வொன்றாக முழுமையாக முடித்துக்கொடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். அந்தவகையில், ராதே ஷ்யாம் படத்தில் தனக்கான காட்சிகளை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ள பூஜாஹெக்டே, ஆச்சார்யா படத்தில் ஒரேயொரு பாடலை மட்டுமே பேலன்ஸ் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது 2019ல் தொடங்கப்பட்ட மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் அகில் அக்கினேனியுடன் நடித்து வரும் பூஜாஹெக்டே, இந்த படத்தை முழுமையாக நடிப்பதற்குள் ஆச்சார்யா பட பாடலையும் முடித்து விட திட்டமிட்டிருக்கிறார். அதன்பிறகே புதிதாக கமிட்டாகியுள்ள படங்களுக்கு அடுத்தடுத்து தேதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே.