ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜெய்பீம். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா சற்றே நீண்ட சிறப்பு தோற்றத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்த படம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்த்ரு பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கிறஞராக இருந்தபோது ஒரு மலைவாழ் பெண்ணின் வழக்கை எடுத்து வாதாடி வெற்றி பெற்றார். அந்த வழக்கை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இதில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு பணியாற்றி உள்ளார்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் கதையை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே கதை. என்று அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




