பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட் | சிகரெட் : ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள் | ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரம் கிடைக்காமல் போனது ஏன்: ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு |
தெலுங்கில் தற்போது பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்கள் இறுதிக்கட்ட பணிகளை எட்டியிருக்கின்றன. கொரோனா இரண்டாவது அலை ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்தப்படங்கள் தங்களுக்கான ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த வருடம் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்தவகையில் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ஆனால் தற்போது சூழல் வேறு மாதிரியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வசூல் ரீதியாக பாதிப்பு அடைய வேண்டாம் என புஷ்பா படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ்பாபு படத்திற்கு முன்னதாகவே இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.