கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வஸந்த். இவர் இயக்கி உள்ள படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இது அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி, எடுக்கப்பட்ட படம் . பார்வதி திருவோத்து, காளீஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா, பத்மபிரியா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா படத்திற்கு இசையமைக்க, வஸந்தே படத்தை தயாரித்துள்ளார்.
படம் தயாராகி 3 ஆண்டுகளாகிறது. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது. ஆனால் திரையரங்கில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முறையான அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.