மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் தயாரிப்பாளர் ஆனது பணம் சம்பாதிக்கும் ஆசையில் அல்ல. சினிமா மீதுள்ள பற்றின் காரணமாக. உன்னை சரணடைந்தேன் படத்தை தயாரித்தேன். அதற்கு மாநில அரசு விருது கிடைத்தது. ஆனால் லாபம் வரவில்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற வர்ஷம் படத்தை தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்தேன். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. தொழிலில் நஷ்டம் இயல்பானது என்று அப்பா ஆறுதல் சொன்னார்.
அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தை எடுத்தேன். படம் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்பார்த்த பணம் வரவில்லை. தொடர்ந்து ஆரண்ய காண்டம் படம் தயாரித்தேன். அது தேசிய விருதுகள் பெற்றது. பெயர், புகழ் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. நல்ல படங்கள் எடுத்தும் ஏன் அவற்றால் எனக்கு ஏன் இழப்பு ஏற்பட்டது என்று புரியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எங்களின் கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் வேலைகள் நடக்கவில்லை. இதை பார்த்தவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இத்தனை வருஷம் சம்பாதித்து வைத்த பணத்தையெல்லாம் பையன் வந்து அழித்து அவரை திவாலாக்கிவிட்டான். எல்லா பணமும் போய்விட்டது. மொத்த சொத்தும் கரைந்துவிட்டது. இனிமேல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வளவு தான்என்று பேசினார்கள். ஆனால் அப்பா, அம்மா ஆதரவாக இருந்தனர். மேடை கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின.
கொரோனாவால் அப்பாவை இழந்து வாழ்க்கை மீண்டும் சீர்குலைந்து விட்டது. தெலுங்கு டி.வி.யில் அப்பா தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னை அழைத்து உள்ளனர். இனிமேல் எனது தந்தை குரலில் கச்சேரிகளில் பாடவும் முடிவு செய்து இருக்கிறேன்.
இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.