அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. எல்லா முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் வெப் சீரிசில் இறங்கி விட்டன. அந்தவகையில் உருவாகும் வெப் சீரிஸ் தான் ஆதலினால் காதல் செய்வீர்.
திரைப்படங்களுக்கு டைட்டில் பாடல் வைப்பது போன்று வெப் சீரிசுக்கும் டைட்டில் பாடல் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஆதலினால் காதல் செய்வீர் சீரிசுக்கு டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். “ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே! ஹே நண்பா... கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..”
என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுதியுள்ளார், சந்தோஷ் இசையமைத்துள்ளார் . இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே வழங்குகிறார் ஜி.பி.பிரகாஷ்.