ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
பிரபல பாப் பாடகியும், அமெரிக்க நடிகையுமான ஜெனிபர் லோபஸ் அவருடைய 52வது பிறந்தநாளை பிரிந்த கணவருடன் கொண்டாடியிருக்கிறார்.
மூன்று முறை திருமணம் செய்து விவாகாரத்து, சில பல ஆண் நண்பர்களுடனான வாழ்க்கை என ஜெனிபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் காதலும், திருமணமும் பிரிவும் கலந்திருக்கிறது.
தன்னுடைய பிறந்தநாளை ஒரு வாரம் முன் பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஒரு படகில் கொண்டாடியிருக்கிறார். 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை தனது காதலனாக இருந்த பென் அப்லெக் என்பவருடன் மீண்டும் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார் ஜெனிபர்.
கடந்த ஏப்ரல் மாதமே அப்லெக்குடன் ஜெனிபர் மீண்டும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. தன் பிறந்தநாளில் அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜெனிபர்.
தனது மூன்றாவது கணவர் மார்க் ஆண்டனி மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளுக்கு 2008ம் ஆண்டில் தாயானவர் ஜெனிபர். அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களை முதன் முதலில் தங்களது பத்திரிகையில் வெளியிட 'பீப்புள்' 6 மில்லியன் யுஎஸ் டாலர் கொடுத்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தனது 52வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மஞ்சள் நிற பிகினி அணிந்து ஜெனிபர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியுள்ளன.