பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
தமிழில் தான் இயக்கி வந்த 'இந்தியன் 2' படம் நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அப்படத்தை அப்படியேவிட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளை தற்போது ஐதராபாத்தில் செய்து வருகிறார். படத்திற்கான பாடல் பதிவுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இன்று படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2016ல் வெளிவந்த 'எம்எஸ் தோனி' படம் மூலம் பிரபலமானவர் கியாரா. தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'ஷெர்ஷா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பூல் புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர், ராம்சரண் முதல் முறையாக இணையும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து ஷங்கர் ஹிந்தியில் இயக்க உள்ள 'அந்நிய்ன' படத்தின் ரீமேக்கிலும் கியாராதான் கதாநாயகி என்று ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இரு படங்களுக்காகவும்தான் கியாராவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள்.