கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஒரு காலத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் அளிக்கும் பேட்டிகளில் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பார்கள். அதன்பிறகு வந்தவர்கள் விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது கொஞ்சம் மாறி உள்ளது.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறி வந்தார் மாளவிகா மோகனன். அவர் ஆசைப்பட்டது போலவே உடனடியாக தனுஷின் 43ஆவது படத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து விடடது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயனும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவாக உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு தனுஷின் பர்பாமென்ஸ் பற்றியும் தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனனின் கனவு நனவானதைப்போன்று துஷாராவின் கனவும் நனவாகுமா?