தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் "சிப்பாய்". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார். இவர் சிம்புவின் "சிலம்பாட்டம்" படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீண்டகால தயாரிப்பில் இப்படம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்.
சிப்பாய் திரைப்படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது. விரைவில் இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இபடத்தை தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல், 17 சர்வதேச விருதுகள் பெற்ற "ஒற்றை பனை மரம்" படத்தை தயாரித்தவர். இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.




