கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி |

ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் காரணமாக பிரபாஸ் ஏற்கனவே நடித்து வந்த படங்கள் தாமதமாகி வந்ததால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஆந்திராவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதால் நாக் அஸ்வினும் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பிரபாஸ் கலந்து கொள்ளாத நிலையில் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் நாக் அஸ்வின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.