பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலாமனவர் நடிகை பரீனா. தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர், விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது நடிப்பிற்காக வாழ்த்துகளையும் வில்லி கதாபாத்திரத்திற்கான வசவுகளையும் நேயர்களிடம் பெறும் இவர், அனைத்தையும் பாஸிட்டாவாக எடுத்து கொள்வார். அதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டமும் அவர்கள் ஆதரவும் இருந்தது.
தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "3 மாதம் இருக்கிறது. குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான்கு வருட கனவு நினைவாகி இருக்கிறது. என் உடல் அதிசயம் செய்து உள்ளது. - பாரதி கண்ணம்மா தொடரின் எதிர் நாயகி வெண்பா" என அவர் பதிவிட்டு உள்ளார்.
இதனையடுத்து பரீனாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்த வருவதுடன், அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா என கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.