பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து வெளியேறிதற்கான காரணத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்த ஜெனிபர். தற்போது மற்றொரு முக்கிய காரணத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகும் பாக்கியலெட்சுமி என்ற சீரியலில், ராதிகா எனும் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார் . இந்த கதாபாத்திற்காக ஜெனிபருக்கென தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இந்நிலையில் ஜெனிபர் திடீரென விலகியது அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜெனிபர், ராதிகா கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் நெகடிவ் கேரக்டராக மாற இருக்கிறது. எனவே, அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என தெரிவத்திருந்தார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில் சீரியலிலிருந்து விலகியதற்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிபர் இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். தனது குடும்பத்தில் வரவிருக்கும் மற்றொரு உறுப்பினரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் ஜெனிபருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.