ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஜெனிபர். சினிமாவில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றியுள்ள இவர், பிரபல நடன இயக்குநர் சின்னா என்பவரின் மகள் ஆவார். அதனால் தந்தையை போலவே ஜெனிபரும் நடனத்தில் பட்டையை கிளப்பி பெயர் புகழை பெற்றார். இந்நிலையில் மாஸ்டர் சின்னா உடல்நிலை குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது.
தனது தந்தையின் இறப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜெனிபர், 'எனது தந்தை துருதுருவென இருப்பார். ஆனால், திடீரென்று அவருக்கு கை கால் வராமல் நடக்க முடியாமல் போய்விட்டது. அதை தவிர வேறு எந்த பிரச்னையும் அவருக்கு இல்லை. துருதுருவென இருந்த அவர் எழுந்த நடக்க முடியவில்லை என மிகவும் வருத்தப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்தார், பழையபடி எழுந்து நடக்க ஆனால் முடியவில்லை. அவர் எங்களை விட்டு போய்விட்டார். பலரும் விசாரித்து உங்களின் ஆறுதல்களை பகிர்ந்துள்ளீர்கள் அதற்கு நன்றி. அவரை சந்தோஷமாக வழி அனுப்ப வேண்டும். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி' என அழுதுகொண்டே பேசியுள்ளார். ஜெனிபருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் ஆறுதலையும் அப்பாவின் மரணத்திற்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.