துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கதாநாயகியாகவும் அறிமுகமானார். விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான் ஷாலினி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உருவானார்கள். பின்னர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அமர்க்களம் படத்தின் போது தான் அஜித் - ஷாலினி இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின் நடிப்பை கைவிட்டார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நடிகர்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்தப் படத்தில் ஷாலினியும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.