ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தற்போது திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் நடிக்கும் கேரக்டர் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் மொட்டைத்தலையுடன் குடுமி வைத்தபடி தான் நடிக்கும் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை கார்த்தி, ஜெயம்ரவியுடன் இணைந்து எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
அதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.