ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் நாவல்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட, படிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சரித்திர நாவல் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்'. புத்தகக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாகும் ஒரே நாவல் இதுதான் என்பதும் கூடுதல் தகவல். அந்த சரித்திர நாவலை இதற்கு முன் பலரும் திரைப்படமாக்க நினைத்து முயற்சிகள் தோல்வியில்தான் முடிவடைந்தது. அதை இயக்குனர் மணிரத்னம் மாற்றிக் காட்டியிருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' என்ற நாவல் பெயரிலேயே இரண்டு பாகங்களாக இப்படம் திரைப்படமாகி வருகிறது. நேற்று இப்படத்தின் முதல் பாக வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பு போஸ்டர் முழுவதும் ஆங்கிலத்தில் தான் இருந்தது. அதே சமயம் படத்தின் பெயரில் 'பொன்னியின் செல்வன்' என்பது இரண்டாவது வரியிலும் 'பிஎஸ் - 1' என்பது முதல் வரியில் பெரிய எழுத்திலும் இடம் பெற்றிருந்தது.
அழகான 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பை தமிழில் ஒரு இடத்தில் கூட போஸ்டரில் இடம்பெறவில்லை என்பது பல வாசகர்களின் குறையாக இருக்கிறது.
'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலி தற்போது இயக்கிக் கொண்டு வரும் படத்தை 'ஆர்ஆர்ஆர்' என்றே அனைவரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அந்தப் படத்தின் முழு பெயரான 'இரத்தம் ரணம் ரௌத்திம்' என யாருமே குறிப்பிடுவதில்லை.
அந்த பார்முலாவிலேயே மணிரத்தினமும் 'பொன்னியின் செல்வன்' என்பதை 'பிஎஸ்' எனக் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




