பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வரும் ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி 'சூர்யா 40' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் ஜுலை 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக சிறிய மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில் இருட்டு அறைக்குள் கையில் சங்கிலியுடன் சூர்யா மாஸான தோற்றத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி வெளியான 10 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சூர்யா40 படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்கவுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். மேலும் சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.