நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற அண்ணனும், ஷாமிலி என்ற தங்கையும் உள்ளனர். ஷாலினியைப் போன்று ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படத்தில் அறிமுகமாகமாகி ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஷாமிலி நடித்துள்ளார். விருதுகளும் பெற்றுள்ளார்.
கதாநாயகியாக சில படங்களில் நடித்தவர் அதன்பின் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஷாமிலி, தனது அக்கா ஷாலினியுடன் இணைந்து வீட்டில் எளிமையான முறையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது ஷாமிலியின் சகோதரர் ரிச்சர்ட் உடனிருந்தார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.