கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம். எனவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தார். அதன்படி விஜய் சென்னை ஐகோர்ட்டில் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். அதில், வாகன நுழைவு வரியில் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் மேல்முறையீடு வழக்கு இன்று காலை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா இருவர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.