கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இந்தியில் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர் தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி படங்களில் நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் மகிழ்திருமேனி இயக்க உதயநிதி நடிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார்.
தமிழில் நிதி அகர்வால் நடித்து இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் கோவில் கட்ட முடிவெடுத்து நிதி அகர்வாலுக்கு சிலை செய்து பாலாபிஷேகம் செய்தனர். இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது டுவிட்டர் பதிவில், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைத்து பூரிப்படைகிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனது ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிட வேண்டுகிறேன்” என தெரிவித்தார். மேலும் கொரோனா நிவாரண நிதிக்கும் ஒரு லட்சம் அளித்தார்.
இந்நிலையில் நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சலுடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த இந்த படங்களை யாரோ வெளியிட்டுவிட்டனர். பிகினி புகைப்படங்கள் என்பதை குறிப்பிடாமல் நிதி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது, என்னுடைய ஒரு குறிப்பிட்ட புகைப்படம் அடிக்கடி பகிரப்படுவதை பார்க்கிறேன். அதை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி இருக்கும் யாரும் அந்த புகைப்படங்களை பதிவிடவோவோ, பகிரவோ மாட்டார்கள். அது தேவையில்லாதது என தெரிவித்துள்ளார்.