நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் |

2007ல் நடந்த மிஸ்.சென்னை போட்டியில் டைட்டில் வென்றவர் சம்யுக்தா ஷன். சந்திரமுகி தொடரில் ருத்ரா கேரக்டரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு இன்னும் புகழ்பெற்றார். இதனால் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார்.
இப்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை ஹேமந்த குமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்திலும் சம்யுக்தா இரண்டாவது நாயகியாக நடிப்பதாக தெரிகிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. என்றாலும் ஹீரோயின் வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்கிறார் சம்யுக்தா.




